
Charus Kitchen
மட்டன் சாப்ஸ்....

தேவையான பொருள்கள்:
மட்டன் - அரை கிலோ
மிளகாய்ப்தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள்பொடி - ஒரு ஸ்பூன்
மிளகுத்தூள் - 2 ஸ்பூன்
சோம்புத்தூள் -1 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழுது - 2 ஸ்பூன்
தேங்காய்ப்பால் - ஒரு கப்
எண்ணெய் - 4 ஸ்பூன்
கரம் மசாலாபொடி - 1 ஸ்பூன்
செய்முறை:
மட்டனை கழுவி தண்ணீரை வடிய விட்டு எண்ணெய் தவிர எல்லாவற்றையும் போட்டு கிளரி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு கிளரிய மட்டனை கொட்டி கிளறிக்கொண்டே இருக்கவும்.
மட்டனில் உள்ள தண்ணீர் முழுவதும் வற்றி மட்டன் நிறம் மாறி வரும்போது அரை டம்ளர் தண்ணீர் தெளித்து கிளறி குக்கரை மூடி 6 விசில் வைத்து சிறுதீயில் 10 நிமிடம் வைத்து இறக்கவும்.
பிரஷர் அடங்கியவுடன் குக்கரை திறந்து அடுப்பில் வைத்து கிளறிகொண்டே இருக்கவும்.
மசாலா குக்கரில் ஒட்டாமல் மட்டன் தனித்தனியாக மசாலா ஒட்டி வரும்போது இறக்கவும்.
மட்டன் சாப்ஸ் ரெடி!