top of page

பாதாமி சிக்கன்

தேவையான பொருட்கள்
சிக்கன் – 1 (சிறிதாக வெட்டி வைத்து கொள்ளவும்)
பாதாம் – 10
வெங்காயம் – 4 – 5 (பொடியாக நறுக்கி கொள்ளவும்)
தயிர் – 1 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – (2 ஏலக்காய் , 4 கிராம்பு , 1 துண்டு பட்டை) 
மல்லி பொடி – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி இலை – அலங்கரிக்க

சிக்கன் ஊறவைக்க தேவையான பொருட்கள்:
மஞ்சள் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
வத்தல் பொடி – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா பொடி – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
15 முதல் 20 நிமிடம் இவை அனைத்தையும் சேர்த்து சிக்கனை ஊற வைக்கவும்

செய்முறை:
பாதாமை 5-10 நிமிடம் ஊறவைத்து பேஸ்ட் செய்துகொள்ளவும்

கடாயில் எண்ணை ஊற்றி கரம் மசாலா பொருட்களை போடவும்

இதனுடன் வெட்டி வாய்த்த வெங்காயத்தை போட்டு வதக்கவும்

பின் அரைத்த பாதாம் பேஸ்டை சேர்க்கவும்

இதனுடன் வத்தல் பொடி,மல்லி பொடி சேர்த்து கடாயை மசாலாவில் இருந்து எண்ணை பிரிந்து வரும் வரை குறைந்த தீயில் மூடி வைக்கவும் 

இனி தயிர் மற்றும் சிக்கனை இதனுடன் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்

தேவையான அளவு உப்பு சேர்த்து கடாயை சிக்கன் வேகும் வரை மூடி வைக்கவும்

கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும் ,
பாதாமி சிக்கன் ரெடி !

குறிப்பு : இதில் தண்ணீர் சேர்க்க தேவையில்லை, தயிர் ,சிக்கனில் உள்ள நீர் மற்றும் எண்ணை இவற்றிலேயே சமைக்கவும்

bottom of page