
Charus Kitchen
சாம்பார் பொடி

தேவையான பொருட்கள்
• மல்லி விதை - 300 கிராம்
• துவரம் பருப்பு - 100 கிராம்
• கடலைப்பருப்பு - 50 கிராம்
• வெள்ளை உளுத்தம் பருப்பு - 30 கிராம்
• மிளகு - 30 கிராம்
• வெந்தயம் - 10 கிராம்
• கறிவேப்பிலை – 2 டேபிள் ஸ்பூன்
• காய்ந்த மிளகாய் - 250 கிராம்
• கடுகு - 15 கிராம்
• சீரகம் - 2 தேக்கரண்டி
• பெருங்காயம் - 15 கிராம்
• முழு மஞ்சள் – 2 அல்லது மஞ்சள் பொடி
• எள்ளு - 25 கிராம் (தேவையானால்)
செய்முறை
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் ,வெள்ளை உளுத்தம் பருப்பு, மிளகு, மல்லி விதை, வெந்தயம், கடுகு மற்றும் எள்ளு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தை வறுக்கவும்.
வறுத்த அனைத்துப் பொருட்களையும் ஆறவைக்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் போட்டு முழு மஞ்சள் அல்லது மஞ்சள் தூள் சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.
சாம்பார் பொடி தயார்.