top of page

Charus Kitchen
இனிப்பு குழிப் பணியாரம்

தேவையான பொருட்கள் :
பச்சரிசி – 1 கப்
அவல் – அரை கப்
வெல்லம் – ஒன்றரை கப்
ஏலக்காய் – கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய் – சுடுவதற்கு
செய்முறை :
அரிசியையும், அவலையும் தனித்தனியாக நன்றாகக் கழுவி தனியாக ஊற வைக்கவும்.
இரண்டையும் ஒன்றன் பின் ஒன்றாக தண்ணீர் விட்டு நைசாக அரைத்து பிறகு வெல்லத்தையும் போட்டு அரைக்கவும்.
ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து வைக்கவும். இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.
பணியார சட்டியில் நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி ஒவ்வொரு குழியிலும் முக்கால் பாகம் அளவிற்கு மாவை ஊற்றவும்.
மாவு அடிப்பகுதியில் வெந்ததும், குச்சி அல்லது ஸ்பூன் உதவியால் திருப்பி விட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
bottom of page