top of page

வெங்காயசிக்கன் பிரை(ஈசி சிக்கன் பிரை)

தேவையானப் பொருட்கள்:
சிக்கன் பீஸ் – 12
காஷ்மீரி மிளகாய் துள் – ஒரு மேசை கரண்டி
உப்பு – தேவைக்கு
பச்சை மிளகாய் – தேவைகேற்ப 
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒன்னறை மேசை கரண்டி
கரம் மசாலா தூள் – அரை தேக்கரண்டி
மிளகு தூள் – அரை தேக்கரண்டி
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது 
எலுமிச்சை சாறு – ஒரு மேசை கரண்டி
கருவேப்பிலை – சிறிது (பொடியாக நருக்கியது )
லெமென் – ஒன்று (சிக்கனை கழுவ)
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி ( சிக்கன் கழுவ)

செய்முறை:
சிக்கனை கழுவி சுத்தம் செய்து அதில் மஞ்சள் தூள், லெமென் ஜூஸ் ஊற்றி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி வடிகட்டவும்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து மசாலாக்களையும் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வேகவைத்து தண்ணீரை வற்ற விட்டு
ஒரு நான் ஸ்டிக் தவ்வாவில் எண்ணை சிறிது ஊற்றி வெங்காயம் , பச்சைமிளகாய் போட்டு வதங்கியதும் சிக்கனை போட்டு நல்ல மொருகலாக வருத்தெடுக்கவும்.
இது உடனடி சிக்கன் ரெடி.

bottom of page