top of page

Charus Kitchen
கருப்பட்டி காபி

சளி, இருமலுக்கு உடனடி நிவாரணம் தரும் கருப்பட்டி காபி
தேவையான பொருட்கள்:
தண்ணீர் - 1 கப்
சுக்கு பொடி - 1 டீஸ்பூன்
கருப்பட்டி - 1 டேபிள் ஸ்பூன்
சுக்கு பொடிக்கு...
உலர்ந்த இஞ்சி/சுக்கு தூள் - 1/2 கப்
மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
பனங்கற்கண்டு - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் சுக்கு பொடி தயாரிக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின் அதனை காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுக்குப் பொடி ஒரு டீஸ்பூன் மற்றும் கருப்பட்டியை சேர்த்து, 2-3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
பின்பு அதனை இறக்கி வடிகட்டினால், சூடான கருப்பட்டி காபி ரெடி!!!
bottom of page