top of page

கடாய் பனீர்

தேவையான பொருட்கள்

எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
நெய் – ஒரு தேக்கரண்டி
சீரகம் – அரை ஸ்பூன்
மல்லி – ஒரு ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – மூன்று
பட்டை – இரண்டு
லவங்கம் – இரண்டு
ஏலக்காய் – இரண்டு
சின்ன வெங்காயம் – மூன்று
இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
தக்காளி – இரண்டு
சக்கரை – இரண்டு சிட்டிக்கை
மஞ்சள்தூள் – சிறிதளவு
பனீர் – ஒரு கப்
நறுக்கிய பெரிய வெங்காயம் – இரண்டு
பச்சை மிளகாய் – இரண்டு
அரைத்த தக்காளி விழுது – சிறிய தக்காளி இரண்டு
உப்பு – தேவையான அளவு
கடாய் மசாலா அரைக்க தேவையான பொருட்கள்
மல்லி – இரண்டு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
மிளகாய் உரித்தெடுத்து(விதைகள்) – இரண்டு ஸ்பூன்

கடாய் மசாலா செய்முறை

மல்லி, சீரகம், மிளகாய் உரித்தெடுத்து மூன்றையும் தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து கொள்ளவும்
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நெய் விட்டு, சீரகம், மல்லி, காய்ந்த மிளகாய், பட்டை, லவங்கம், ஏலக்காய், சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, சக்கரை, உப்பு, மஞ்சள் தூள், பனீர், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி விழுது ஆகியவற்றை கிளறி நன்றாக வதக்கவும்.
பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும்.
பத்து நிமிடம் பிறகு இப்பொழுது அரைத்து வைத்துள்ள கடாய் மசாலாவை இதனுடன் சேர்க்கவும். நன்றாக வதக்கவும்
பத்து நிமிடம் கொதிக்க விடவும். இறுதியில் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
அசத்தலான கடாய் பன்னிர் ரெடி.

bottom of page