top of page

சென்னா மசாலா

தேவையான பொருட்கள்
வெள்ளைச் சென்னா – 2 கப்
உப்பு – 1 டீஸ்பூன்
எண்ணை – 8 டேபிள் ஸ்பூன்
வதக்கி அரைக்க
எண்ணை – 8 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1
தக்காளி – 2
பூண்டு – 8 பற்கள்
இஞ்சி விழுது – 1/2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
தனியாத் தூள் – 1 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
அலங்கரிக்க
கொத்தமல்லித் தழை – சிறிதளவு

செய்முறை
* வெள்ளைச் சென்னாவை 8 முதல் 10 மணி நேரம் நீரில் ஊறப்போட்டு 1 சிட்டிகை உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு குக்கரை சிம்மில் 5 நிமிடங்கள் வைத்து வேக வைக்கவும்.

* வதக்கி அரைக்க கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்களை நன்கு சுருள வதக்கி, 2 டேபிள் ஸ்பூன் வேக வைத்த சென்னா சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி மிக்சியில் விழுதாக அரைக்கவும். (வேக வைத்த சென்னா 2 டேபிள் ஸ்பூன் அளவு சேர்ப்பதானது கிரேவியை கெட்டியாக்குவதுடன் சுவையை அதிகரிக்கும்.)

* அரைத்த விழுதை மேலும் சிறிது எண்ணையில் நன்கு வதக்கி, வேக வைத்த சென்னா, உப்பு, வேக வைத்த சென்னாவில் இருந்த தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவிட்டதும் கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

bottom of page