top of page

கார்ன் ஃபிளவர் ஹல்வா

தேவையான பொருட்கள்
சோள மாவு – அரை கப்
சர்க்கரை – ஒரு கப்
தண்ணீர் – இரண்டு கப்
ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை
ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்
நெய் – மூன்று டீஸ்பூன்
முந்திரி – பத்து

செய்முறை
ஒரு கிண்ணத்தில் தண்ணீர், சோள மாவு, சர்க்கரை, ஃபுட் கலர், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும்.
பின், கடாயில் ஊற்றி கைவிடாமல் கிளறவும்.
பின், ஜெல்லி பதம்வந்தவுடன் கால் டீஸ்பூன் ஏலக்காய் தூள் மற்றும் முந்திரி போட்டு இரண்டு நிமிடம் கழித்து அல்வா பதம் வந்தவுடன் ஒரு தட்டில் நெய் தடவி அதில் ஊற்றி ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.

bottom of page