
Charus Kitchen
பூண்டு ஊறுகாய்

தேவையான பொருட்கள்
பூண்டு – 2 (பல்ப்)
வத்தல் – 5 - 8
மஞ்சள் பொடி – சிறிது
பெருங்காயபொடி – 1 டீஸ்பூன்
ஜீரகம் – முக்கால் டீஸ்பூன்
புளி கரைசல் – கால் கப்
சர்க்கரை – அரை டீஸ்பூன்
வெந்தயம் – முக்கால் டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
நல்லெண்ணெய் – இரண்டு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை இல்லாமல் வத்தல், ஜீரகம் , வெந்தயம், உப்பு சேர்த்து வறுத்து பொடி செய்து கொள்ளவும் வானலியில் எண்ணை விட்டு பூண்டு சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்
இதனுடன் வறுத்து பொடித்து வைத்த பொடியை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும் மற்றும் புளி கரைசல் , சர்க்கரை சேர்த்து மீண்டும் இரண்டு நிமிடம் வதக்கவும். அடுப்பை அணைத்து விடவும்
மற்றொரு பாத்திரத்தில் எண்ணை விட்டு கடுகு,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பூண்டு கலவையில் சேர்க்கவும்
பூண்டு ஊறுகாய் ரெடி !