top of page

சாக்லட் கேக்

தேவையான பொருட்கள்
மைதா – ஒரு கப்
பொடித்த சீனி – ஒரு கப்
இனிப்பில்லாத கொக்கோ பவுடர் – அரை கப்
பேகிங் பவுடர் – ஒரு டீ ஸ்பூன்
உப்பு – சிறிது
பால் – அரை கப்
வெனிலா எசென்ஸ் – ஒரு டீ ஸ்பூன்
பட்டர் – அரை கப்
முட்டை – இரண்டு
திக் கிரீம் – முக்கால் கப்

செய்முறை
ஒரு பாத்திரத்தில் பொடித்த சீனி , பட்டர் போட்டு நன்றாக கலக்கவும்
இதனுடன் இரண்டு முட்டை நுரை பொங்க அடித்து, வெனிலா எசென்ஸ், சேர்த்து கலக்கவும்
மற்றொரு பாத்திரத்தில் மைதா, பேகிங் பவுடர் , கொக்கோ பவுடர் சேர்த்து மேல உள்ள கலவையுடன் கலக்கவும் 
மைக்ரோவேவ் ஓவனில் வைக்ககூடிய பாத்திரத்தில் கொஞ்சம் பட்டர் தடவி லேசாக மைதா தூவி மேலே உள்ள கேக் கலவையை ஊற்றி 25- 30 நிமிடம் அல்லது கேக் வேகும் வரை மைக்ரோவேவ் ஓவனில் வைக்கவும் 
கேகின் நடுவில் ஒரு குச்சி அல்லது டூத்பிக் வைத்து குத்திபார்த்தால் ஒட்டாமல் வரும்
கேக் ரெடி!

அலங்காரம் :
கேக் ஆறியதும் கேக்கை வட்டமாக இரண்டாக வெட்டி கீழ் பாதி கேக்கின் நடுவில் திக் கிரீம் தடவி மேலே உள்ள பாதி கேக்கை வைத்து அதன் மேலும் திக் கிரீம் தடவி அதற்கு மேல் சாகலேட் சிரப் ஊத்தி அலங்காரம் செய்யலாம்.

குறிப்பு: திக் கிரீமில் சீனி சேர்த்து கொள்ளவும்.
கொக்கோ பவுடரில் பால், சீனி சேர்த்து சாகலேட் சிரப்பிற்கு பதில் உபயோகபடுத்தலாம்

bottom of page