top of page

பாதாம் மில்க் ஷேக் 

என்னென்ன தேவை?

பாதாம்    -    10
பால்    -    1  கப்
சர்க்கரை    -    2 டீஸ்பூன்
வெனிலா ஐஸ்க்ரீம்    -    1 ஸ்கூப்
குங்குமப்பூ    -    4 (அலங்கரிக்க)

 

எப்படிச் செய்வது?

பாதாமை 15 நிமிடங்கள் வெந்நீரில் ஊற வைக்கவும். தோல் உரித்த பாதாமை சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அதன் பிறகு ஐஸ்க்ரீம் சேர்த்து நுரைக்க அரைக்கவும். பால் சேர்த்து கலக்கி, குங்குமப்பூவால் அலங்கரித்துப் பரிமாறவும்.

உங்கள் கவனத்துக்கு...

ஆறிய பால் சேர்க்கவும். சூடான பால் சேர்த்தால் திரிந்து விடும். ஜில்லுனு பரிமாறவும்!

bottom of page