top of page

உளுந்து - 300 கிராம்
அரிசி - ஒரு கிலோ
வெந்தயம் - அரை மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
பூண்டு - 3
தேங்காய் - ஒரு மூடி
உப்பு - 4 மேசைக்கரண்டி



தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்.


வாணலியில் உளுந்தை போட்டு 5 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும். வாசனை வரும் வரை வறுக்கவும்.


ஒரு பாத்திரத்தில் 2 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு அரிசி உளுந்து இரண்டும் வேகும் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.


அதில் அரிசியை களைந்து போட்டு, வறுத்த உளுந்தையும் சேர்க்கவும்.


பின்னர் சீரகம், வெந்தயம், பூண்டு போட்டு வேக விடவும்.


சாதம் முக்கால் பதம் வெந்ததும் உப்பு போட்டு நன்கு கிளறி விடவும்.


சாதம், உளுந்து இரண்டும் வெந்ததும் தேங்காய் துருவல் போட்டு நன்கு கிளறி விடவும்.


எல்லாம் சேர்ந்து நன்கு வெந்ததும் கிளறி இறக்கி வைத்து விடவும்.

bottom of page