
Charus Kitchen
கேரளா ஸ்பெஷல் அரிசி புட்டு

தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 4-5 கப்
தேங்காய் - 2-3 கப் (துருவியது)
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிது நீரை ஊற்றி, அதோடு கொஞ்சம் சிறிது உப்பை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
பின் மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு, அதில் கொதிக்க வைத்துள்ள உப்பு நீரை விட்டு, புட்டுக்கு ஏற்றவாறு கலந்து கொள்ளவும். பின்னர் அந்த புட்டு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1- 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி, அந்த பாத்திரத்தில் கொடுத்திருக்கும் சிறு மூடியை வைத்து மூடி கொதிக்கவிடவும்.
பின்னர் புட்டு பாத்திரத்தில் நீளமாக இருக்கும் குழாயில், முதலில் சிறிது புட்டு மாவு சிறிது போட்டு, பின்னர் துருவிய தேங்காயை போட்டு, மறுபடியும் புட்டு மாவைப் போட்டு, குழாய் நிரம்பும் வரை தொடர்ந்து செய்யவும்.
பிறகு அந்த குழாயை புட்டு பாத்திரத்தின் மேல் வைத்து, 5-6 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். பின்னர் அதனை வெளியில் எடுத்து பரிமாறவும்.
அவ்வளவு தான் கேரளா ஸ்பெஷல் அரிசிப் புட்டு தயார்! கடலை குழம்பு மற்றும் சர்க்கரை தேங்காய் துருவல் தூவியும் சாப்பிட்டால், மிகவும் சுவையாக இருக்கும்.