top of page

Charus Kitchen
பாகற்காய் சிப்ஸ்

தேவையான பொருட்கள்
பாகற்காய் – இரண்டு பெரியது
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் பொடி – ஒரு டீ ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி இலை – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு தேக்கரண்டி
வத்தல் பொடி – ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா பொடி – ஒரு தேக்கரண்டி
அரிசிமாவு அல்லது சோள மாவு – 1 டீ ஸ்பூன்
எண்ணை – பொரிக்க தேவையான அளவு
செய்முறை
மெல்லிய வட்ட துண்டுகளாக பாகற்காயை வெட்டி மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கலக்கவும்.
எண்ணையை தவிர மேலே குறிப்பிட்ட மற்ற அனைத்து பொருட்களையும் இதனுடன் சேர்த்து நன்றாக பாவற்காய் உடையாமல் கலக்கவும்
எண்ணை சூடானதும் பாகற்காயை பொரித்து எடுக்கவும்
சுவையான பாகற்காய் சிப்ஸ் ரெடி!
bottom of page