
Charus Kitchen
செட்டிநாடு சிக்கன் மசாலா / சிக்கன் டிரை கறி

தேவையான பொருட்கள்
1. சிக்கன் - 500 கிராம்
2. சின்ன வெங்காயம் - 75 கிராம் (5 வெங்காயம் )
3. இஞ்சி - 1 இன்ச் நீளமாக
4. பூடு - 1
5. காய்ந்த வத்தல் - 6 to 8
6. ஜீரகம் - 3/4 ஸ்பூன்
7. கொத்தமல்லோ - 1 ஸ்பூன்
8. சோம்பு - 1 ஸ்பூன்
9. பெப்பர் - 1/4 ஸ்பூன்
10. உப்பு - தேவைக்கேற்ப
11. எண்ணை - 5 ஸ்பூன் (நல்லெண்ணெய் நல்லது )
12. கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பிலை - அலங்கரிக்க
செய்முறை
• வானலியில் கீழே கொடுக்கப்பட்டுள்ள மசாலாவை லேசாக வறுத்து பொடிக்கவும் ,
காய்ந்த வத்தல் - 6 to 8
ஜீரகம் - 3/4 ஸ்பூன்
கொத்தமல்லோ - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
பெப்பர் - 1/4 ஸ்பூன்
• மிக்ஸ்யில் வெங்காயத்தை கொரகொரப்பாக அரைத்து எடுத்துகொள்ளவும்
• இஞ்சி பூடு விழுதாக அரைத்து எடுக்கவும்
• வானலியில் எண்ணை விட்டி அரைத்த வெங்காயம் மற்றும் இனி பூடு சேர்த்து வதக்கவும் ,பச்சை வாசனை போனதும் சிக்கனை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்
• இதனுடன் பொடித்த மசாலா பொடியை சேர்க்கவும் .
• இரண்டு நிமிடம் கழித்து சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும்
• குறைந்த தீயில் மூடி போட்டு சிக்கனை சமைக்கவும் . தண்ணீர் வற்றி சிக்கன் வெந்ததும் கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும் .
• (நான் சிறிது பொடித்த அண்டி பருப்பு தூவி எடுத்தேன்)