top of page

கேரளா நாடன் கோழிக்கறி

தேவையான பொருட்கள்
ஊறவைக்க 
• 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு (optional)
• ½ டீ ஸ்பூன் வத்தல் பொடி 
• ¼ டீ ஸ்பூன் மஞ்சள் பொடி 
• ½ டீ ஸ்பூன் கரம் மசாலா பொடி 
• ⅛ டீ ஸ்பூன் பெப்பர் பொடி 
• ½ கிலோ சிக்கன் 
வறுத்து அரைக்க வேண்டிய பொருட்கள் 
• 1 ½ டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி 
• 1 இன்ச் பட்டை 
• 4 கிராம்பு 
• 2 ஏலக்காய் 
• ¼ டீ ஸ்பூன் பெப்பர் 
• ¾ டீ ஸ்பூன் சோம்பு
• ¼ டீ ஸ்பூன் ஜீரகம்
• 4 to 5 வத்தல் 
குழம்பிற்கு 
• ½ கப் வெங்காயம் நீளமாக வெட்டியது 
• 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூடு பேஸ்ட் 
• 1 ½ to 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணை 
• ¾ கப் தேங்காய் பால் 
தாளிக்க 
• 1 ½ டீ ஸ்பூன் எண்ணை 
• 1 வத்தல் 
• 3 to 4 வெங்காயம் பொடியாக நறுக்கியது 
• 1 கறிவேப்பிலை

செய்முறை 
1. சிக்கனை ஊறவைக்க வேண்டிய பொருட்களுடன் 30 to 45 நிமிடம் ஊறவைக்கவும் 
2. வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை விழுதாக அரைக்கவும் 
3. கடாயில் எண்ணை ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கவும் .
4. இதனுடன் இஞ்சி பூடு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும் .
5. இதனுடன் சிக்கனை சேர்த்து அதிக தீயில் 2 to 3 நிமிடம் வைக்கவும் 
6. அரைத்த மசாலாவை இதனுடன் சேர்க்கவும் . தேவையான உப்பு சேர்க்கவும் . சிக்கன் வேகும் வரை குறைந்த தீயில் மூடி வைத்து சமைக்கவும் . அடிக்கடி கிளறி விடவும், 
7. நான் தண்ணீர் சேர்க்கவில்லை சிக்கனில் உள்ள நீரும், அரைத்த மசாலாவில் உள்ள நீரும் போதுமானது 
8. இப்பொழுது தேங்காய் பாலை சேர்க்கவும் . தேங்காய் பால் கொதித்தது இறக்கவும் 
9. கடாயில் எண்ணை விட்டு வெங்காயம் கறிவேப்பிலை வத்தல் சேர்த்து வதங்கியதும் கறியில் போடவும்

bottom of page