
Charus Kitchen
சிக்கன் கொத்து பரோட்டா

தேவையான பொருட்கள் :
பரோட்டா – 2
வெங்காயம் – 1
கறிவேப்பிலை - சிறிது
சிக்கன் – ½ கப் அல்லது தேவைகேற்ப
பச்சை மிளகாய் – 4
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
தக்காளி – ½
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
முட்டை - 2
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
1.பரோட்டாவை சுட்டு சிறு சிறு துண்டுகளாக்கி மிக்சியில் விப்பரில் 2 சுற்று சுற்றி எடுக்கவும்.
2.வெங்காயத்தை மெல்லியதாகவும், பச்சை மிளகாய் ,தக்காளியை பொடியாகவும், நறுக்கி கொள்ளவும்.
3.கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் , மிளகாய் ,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
4. பின்னர் தக்காளி சேர்த்து வதங்கியதும் தூள் வகைகள் , உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை பிரட்டவும்.சிக்கன் துண்டுகளையும் போட்டு வதக்கவும்,.கடைசியாக முட்டை உடைத்து ஊற்றி கொத்தி விடவும்.
5.உதிர்த்து வைத்துள்ள பரோட்டாவை மசாலாவில் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.