
Charus Kitchen
சுவையான வெஜ் நூடுல்ஸ்

தேவையான பொருட்கள்
நூடுல்ஸ் – இரண்டு கப்
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது)
கேரட் – ஓன்று (பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் – ஒன்று (பொடியாக நறுக்கியது)
கேபேஜ் – கால் கப் (பொடியாக நறுக்கியது)
டொமேட்டோ சாஸ் – ஒரு டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் – ஒரு டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் – இரண்டு டீ ஸ்பூன்
சிக்கன் மசாலா பவுடர் அல்லது கரம் மசாலா பவுடர் – ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – இரண்டு டேபிள் ஸ்பூன்
செய்முறை
நூடுல்ஸை கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்து குளிர்ந்த நீரில் அலசி எடுத்துவைத்துகொள்ளவும்
பாத்திரத்தில் எண்ணை விட்டு காய்கறிகளை (வெங்காயம், கேரட், பீன்ஸ், கேபேஜ்) போட்டு வதக்கவும் காய்கறிகளுக்கு தேவையான உப்பு சேர்த்து கொள்ளவும்.
காய்கறி வதங்கியதும் நூடுல்சுடன் கிடைக்கும் பொடி மற்றும் சிக்கன் மசாலா அல்லது கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
இதனுடன் டொமேட்டோ சாஸ், சில்லி சாஸ், சோயா சாஸ் சேர்க்கவும் .
வேகவைத்து தனியாக வைத்திருக்கும் நூடுல்ஸையும் இதனுடன் சேர்த்து கலந்தால் சுவையான வெஜ் நூடுல்ஸ் ரெடி !
குறிப்பு: காய்கறிகள் உங்கள் விருபத்திற்கேர்ப்ப உபயோகிக்கவும்.