top of page

இடியாப்பம்

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 2 கப்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

இடியாப்பம் செய்வதற்கு... முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி , அதை நன்கு கொதிக்க வைத்து இறக்கவும். பின் அந்த நீரை ஆற வைக்கவும். பின் ஒரு பாத்திரத்தில் மாவை போட்டு, அதில் உப்பு மற்றும் நீரை ஊற்றி, மென்மையாக பிசைந்து கொள்ளவும். (தண்ணீர் மிகவும் சூடாக இருக்க கூடாது. இல்லையெனில் மாவு மிகவும் கெட்டியாகிவிடும்.) பிறகு பிசைந்த மாவை இடியாப்ப அச்சில் போட்டு, இட்லி தட்டில் வட்டமாக பிழியவும். இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, பிழிந்து வைத்துள்ள இட்லி தட்டை வைத்து, மூடி வேக வைத்து இறக்கவும்.
 

bottom of page