வெஜ் சேமியா பிரியாணி
- charusrecipe
- Oct 12, 2016
- 1 min read

சேமியா - 200 கிராம் ஆயில் - டேபிள் ஸ்பூன் 5 பச்சை பட்டானி - 50 கிராம் கேரட் (நறுக்கியது) - 50 கிராம் பீன்ஸ் (நறுக்கியது)- 50 கிராம் பெரிய வெங்காயம் (நறுக்கியது) - 2 தக்காளி (நறுக்கியது) - 1 பட்டை - 1 பூண்டு - 2 கொத்துமல்லி,புதினா (நறுக்கியது) டேபிள் ஸ்பூன் - 4 பச்சை மிளகாய் (கீறியது) - 2 மிளகாய் தூள் - டேபிள் ஸ்பூன் - 1 பிரியாணி மசாலா தூள் - டேபிள் ஸ்பூன் - 2 தண்ணீர் - டம்ளர் 31/2 உப்பு தேவைக்கேற்ப
பாத்திரம் சூடானவுடன் ஆயிலை ஊற்றி பட்டை,பூண்டு,வெங்காயம்,பச்சை மிளகாய்,கொத்துமல்லி,புதினா நன்றாக வதக்கவும். மிளகாய் தூள்,பிரியாணி மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி கேரட்,பீன்ஸ்,பச்சை பட்டானி சேர்த்து அரை டம்ளர் தெளித்து மிதமான தீயில் வைக்கவும். நன்றாக வெந்தவுடன், தண்ணீர் - டம்ளர் 31/2 சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்கும்பொழுது சேமியா சேர்த்து நன்றாக கலந்து விடவும். மிதமான தீயில் வைக்கவும். சேமியா மெல்லியதாக இருப்பதால் ஏழே நிமிடத்தில் சுவையான வெஜ் சேமியா பிரியாணி ரெடி.
Comments